Picture
ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை


வீரகேசரி இணையம் 1/25/2010 4:01:47 PM - ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர். இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2010

    Categories

    All