Picture
ஜேவிபி எம்.பி.விஜித்த ஹேரத் கிளிநொச்சியில் தடுத்து வைத்து விசாரணை


1/26/2010 9:26:29 AM - மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எமக்குத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜனாதிபதி வேட்பாளர் சன்ன ஜானக சுகத்சிறி கமகே மற்றும் தேர்தல் முகவர்கள் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளைப் பார்வையிடச் சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலிடத்தில் வந்த உத்தரவின் அடிப்படையிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வாக்குச் சாவடிகளுக்கு முகவர்கள் செல்வதைத் தடுக்கும் முற்சியே இது என மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    January 2010

    Categories

    All