Picture
கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார்.


புதிய சாதனையாக உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமாந்தரமான இறுக்கமான கார் நிறுத்துமிடத்தில் மற்றைய காரிலிருந்து 26 cm இடைவெளியிலேயே மேற்படி கார் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையின் மூலம் முன்னர் ஒரு சீனரால் மேற்கொள்ளப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 
Picture
கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது.இம்முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண்டு இருந்தது. 

மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்தது. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் இத்தோற்றம் அமைந்தது. 

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? என்று நிபுணர்கள் கூட சந்தேகிக்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் இயற்கை எப்போதும் அற்புதம் ஆனது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.