Picture
போட்டோஷாப் அடிப்படைபாடங்கள்-3

சென்றவார பதிவுகளில் Morquee Tools  பற்றிபார்த்தோம் . இப்போதுஇந்த மார்க்யுடூலை தேர்வு செய்து மேலும் பலவசதிகளை பெறுவது பற்றிபார்ப்போம். இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்களேயானல் உங்களுக்கு File,Edit,Image  பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில் செலக்ஷன்டூல்கள் 4 இருக்கும். அந்தடூல்கள்தான் இவை:-

Picture
இதில் முதலில் இருப்பது New Selection.  சென்ற பதிவில் இதை பார்த்தோம்.  சதுரமாகவோ-  செவ்வகமாகவோ படம் இருந்தால் தேர்வுசெய்து விடுகின்றோம். ஆனால் அதுவோ செவ்வகம் நெடுக்குவசத்திலும் படுக்கைவசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ள Add to Selection Tool உதவுகிறது.  இப்போது இந்த படத்தை பாருங்கள்.


Picture
இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம் மட்டும் வேண்டும். ஆனால் New Selection Tool- ல் தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும். ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம். முதலில் New Selection மூலம் கோபுரம்மட்டும் தேர்வு செய்யுங்கள்.


Picture
அடுத்து Add Selection Tool  மூலம் பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்


Picture
இப்போது சென்றபாடத்தில் சொன்னவாறு காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.


Picture
இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களேயானல் இதில் ஒரு பெண்மணிகோயிலுக்கு செல்கின்றார். அவர் நமக்கு வேண்டாம். எப்படி அவரைநீக்குவதுஅதற்கு இந்த Subtract Selection Tool  உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வுசெய்து இந்த டூல்மூலம் அந்த பெண்மணியைமட்டும் தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணிமட்டும் தேர்வாகும்.  படத்தை பாருங்கள். இப்போது இந்தபடத்தில் பார்த்தீர்களேயானல் இதில் ஒருபெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர் நமக்குவேண்டாம்.  எப்படி அவரை நீக்குவதுஅதற்கு இந்த Subtract Selection Tool உதவும்.  முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்துஇந்தடூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும் தேர்வுசெய்யவும்.  இப்போதுஇந்த பெண்மணிமட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.


Picture
முன்பு கூறியபடி தேர்வு செய்து கட்-காப்பி-பேஸ்ட் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.


Picture
வரும் பாடங்களில் வெண்மை நிறத்தை பேட்ச் ஓர்க்மூலம் நிரப்புவதைபின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும் தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தைபாருங்கள்.


Picture


இப்போது கிணறைதேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட் செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.


Picture
இது வரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்.


Picture
இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்


Picture
இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்துவிதம் விதமாக கட்செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன் மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.

போட்டோஷாப்பற்றி

மூம்மூர்த்திகள் உள்ளது போல் போட்டோவில் மொத்தம் மூன்றுகலர்களே உள்ளன. அவை RGB எனப்படும் RED,GREEN,BLUE என்பனவே அவை.  இவை ஒவ்வோன்றும் 256 shadow கொண்டு உள்ளது. அவைகள் மூன்றும் சேரும் போது நமக்கு 256x256x 256 என மொத்தம் 16777216 நிறங்கள் கிடைக்கும்.

நன்றிவேலன்.


    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    February 2010

    Categories

    All