Picture
Picture
போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றிநாம் தெரிந்து கொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிடவிரும்புகின்றேன். போட்டோஸ்டுடியோவைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்கவேண்டியதில்லை.

இப்போது கற்கபோகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வதுமூலம் நாம்நமது சின்னசின்ன தேவைகளையே பூர்த்திசெய்துகொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்குதெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படைபாடங்களில் வரும்வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பைபற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவுபோட்டோஷாப்பற்றிஏதும்தெரியாதபுதியவர்களுக்காகபதிவிட்டுள்ளேன்

சரிபாடத்திற்குபோவோம்.

அடோப்நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப்-6, அடுத்துபோட்டோஷாப்-7, போட்டோஷாப்-8 (cs-1), போட்டோஷாப்-9 (cs-2), போட்டோஷாப்-10 (cs-3) , இறுதியாக போட்டோஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட்டோஷாப்பதிவு7 லிருந்துபதிவு9 வரை இருக்கலாம். பதிவுஅதிகமாக செல்லசெல்ல வசதிகள்கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட்டோஷாப்7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது.

முதலில் உங்களது போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். அடுத்துஅதில் உள்ள File - Open - கிளிக்செய்யுங்கள். நீங்கள ்மாற்றவிரும்பும்புகைப்படம்உள்ளDrive - Folder - திறந்துகொள்ளுங்கள். உங்களுக்குஇந்தமாதிரிஓப்பன்ஆகும்.


Picture
நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்குபுகைப்படங்கள் List  ஆக தெரிய ஆரம்பிக்கும்.  நமக்குதேவையான புகைப்படத்தைபுகைப்பட எண்வைத்து தேடவேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்குபுகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமானதாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படம் தேர்வுசெய்யவும்

Picture
இப்போதுநீங்கள் இடப்புறம் பார்த்தால் உங்களுக்குஇந்த டூல்கள் பாக்ஸ் கிடைக்கும். இதில் பல டூல்கள் பல உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில் முதலில் உள்ள மார்க்டூலை செலக்ட் செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை இந்த டூலின் அருகேகொண்டு சென்றால் உங்களுக்குஇந்த காலம் ஓப்பன் ஆகும்.


Picture
இதில் முதலில்உள்ளRectangular Marquee Tool செலக்ட்செயயவும். அதைநீங்கள தேர்வு செய்தபடத்தின் தேவையான இடத்தில் மவுஸால் தேர்வுசெய்யவும். உங்களுக்கு இந்த மாதிரி கிடைக்கும்


Picture
இப்போது நீங்கள் Edit  சென்று Copy  யை தேர்வு செய்யவும். மறந்தும் Cut  தேர்வு செய்ய வேண்டாம்.  அடுத்து நீங்கள் மீண்டும் File  சென்று அதில் New  தேர்வு செய்யவும். உங்களுக்குஇந்தகாலம் ஓப்பன் ஆகும்.


Picture
இதில் மாற்றங்கள் ஏதும் செய்யவேண்டாம்.  அதை அப்படியே ஓகேகொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லித் தருகின்றேன். அப்போழுதுநாம் மாற்றங்கள் செய்யலாம்) .உங்களுக்கு ஒரு வெள்ளை நிறகாலம் ஓப்பன் ஆகும். மீண்டும் நீங்கள் Edit  சென்று அதில் உள்ள Paste  கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் மட்டும் காபி ஆகும்.


Picture
இதை தனியே Save  கொடுத்து சேமித்து வைக்கவும். இது போல் Eliplitical Marque Tool  செலக்ட்செய்யவும்


Picture
நான் இந்தபடத்தில் (இதுகங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கோபுரம்) கோபுரம்மட்டும் தேர்வு செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee Tool -ல்செய்தவாறுகாபி- பேஸ்ட் செய்யவும். உங்களுக்குஇந்தமாதிரியாக படம் கிடைக்கும்.


Picture
இதில் உள்ளமற்ற இரண்டுடூல்கள் நமக்கு தேவைபடாது. எனவே அதைவிட்டுவிடுவோம். போட்டோஷாப்பற்றிய அடுத்தபாடம் அடுத்தகிழமைபதிவிடுகின்றேன். நீங்கள் போட்டோஷாப்பில் நன்கு பயிற்சி எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன். இந்தடூலால் என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன். இதுபுதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

நன்றிவேலன்.


    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    February 2010

    Categories

    All