Picture
போட்டோஷாப்பில் ஒருபடம் நாம் மாறுதல் செய்வதற்கு முன் அதை பிரதி DUBLICATE எடுத்து வைக்கசொல்லியிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE எப்படி எடுப்பது எனகேட்டிருந்தார். அதனால் DUBLICATE  எப்படி எடுப்பதுஎன முதலில் பார்ப்போம். உங்களுக்கு தேவையான படத்தைமுதலில் திறந்து கொள்ளுங்கள். நான் இந்தபிரம்மா படத்தை தேர்வு செய்து திறந்துள்ளேன்.


Picture
இப்போது மேல்புறம் பார்த்தால் உங்களுக்கு  FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT...  என வரிசையாக இருப்பதில் IMMAGE – தேர்வு செய்யுங்கள். உங்களுக்குவரிசையாக கீழ் கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.


Picture
அதில் Dublicate என்பதை கிளிக்செய்யுங்கள்.  உங்களுக்கு படத்தின் மீதுகீழ்கண்டவாறு ஒரு விண்டோதிறக்கும்


Picture
அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோஅல்லது புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள்விரும்பும் பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து  OK கொடுங்கள். உங்களுக்கு இந்த மாதிரிபடம் இரண்டு தோன்றும்.


Picture
இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தைமூடி வைத்து விட்டு காப்பியில் ( நிஜத்தின்நிழலில்) என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள் உங்களுக்குபிடித்திருந்தால் அதை சேமியுங்கள்பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel) செய்து விட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒருபடத்தை பிரதி(Dublicate) எடுத்துக் கொள்ளுங்கள். பிரதி எடுப்பதில் நன்குபயிற்சி பெறநான்குஐந்து முறை முயற்சி செய்துபாருங்கள். சரியாக வரும். இனிபாடத்திற்குவருவோம். சென்றபதிவுகளில் மார்க்யூடூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள பிறவசதிகளையும் இப்போதுபார்ப்போம்இதில் முன்வகுப்புகளில் Deselect, Select Inverse, Feather...  பற்றிபார்த்தோம்.  இதில் அடுத்து உள்ளது Save Selection.. இதன் உபயோகம் நமக்கு இப்போது தேவைபடாது. அதனால் அதை பின்பு பார்ப்போம். அடுத்து உள்ளது Make Work Path.  இதை தேர்வுசெய்யுங்கள். நீங்கள் மார்க்யூடூலால் தேர்வுசெய்த பகுதியில் கர்சரை வைத்து கிளிக்செய்தால் வரும் பகுதியில் Make Work Path  செலக்ட் செய்யவும்


Picture
இதில் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் டாலரன்ஸ் 5 எனவைத்து ஓகே கொடுக்கவும்.


Picture
நான் கீழ் கண்டபடத்தில் அதை தேர்வு செய்துள்ளேன். இது படத்தை சுற்றி ஒருகேர்டு போட்டவாறு நமக்கு படம் கிடைக்கும். கும்பலாக உள்ளநபர்களின் படங்களில் நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு, கட்டம்கட்டிகாண்பிக்க இது பயன்படுகிறது. பிரபலமானவர்களின் கும்பலாக உள்ளபுகைப்படத்தில் அவரைமட்டும் காண்பிக்க வட்டம்- கட்டம்கட்டியுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதைஇதன் மூலம் செய்யலாம்.  


Picture
அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழிகாப்பி. சரி லேயர் என்றால் என்ன? போட்டோஷாப்பின் உயிர்நாடியே லேயர் எனலாம். அதுபற்றிபின்னர் வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரிலேயர் எப்படி வரவழைப்பது? மிகவும் சுலபம். உங்கள் கீ-போர்டில்F7 கீயை ஒருமுறை அழுத்துங்கள். உங்களுக்குக்கான லேயர் ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்


Picture
சரி பாடத்திற்கு வருவோம்.  மார்க்யூடூலால் தேர்வு செய்துவரும் விண்டோவில் அடுத்து வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்


Picture
நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது லேயரில் சென்று அமர்ந்து கொள்ளும். படத்தை பாருங்கள்.


Picture
அடுத்து உள்ளது New Layer. , இதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதியலேயர் ஒன்று உருவாகும்.


Picture
அதில் உள்ள New Layer  கிளிக் செய்யவும்.


Picture
உங்களுக்கு புதிய விண்டோதிறக்கும்.  அதில்மாற்றம் ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதியலேயர் ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.


Picture
லேயர் பற்றிய பாடத்தில் இதை பற்றி விரிவாக பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில் Free Transform பற்றிபார்க்கலாம். பதிவின் நீளம்கருதிபாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

நன்றிவேலன்.





Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    February 2010

    Categories

    All