Picture
Picture
போட்டோஷாப் அடிப்படைபாடங்கள்-2. சென்றவாரம் Marquee tool பார்த்தோம்.மார்க்குயுடூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.

உங்களுக்கு மேற்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம் தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லை என்றால் இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது மறைந்துவிடும். அடுத்து உள்ள Select Inverse. நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிரமற்ற இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு கீழே உள்ளபுகைப்படத்தில் உள்ளபடத்தில் கண்ணைமட்டும் Rectangle Marquee Tool ஆல் செலக்ட் செய்துள்ளேன்.


Picture
அடுத்து அதில் வைத்துரைட் கிளிக்செய்தால் உங்களுக்குகீழ்கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும். இதில் உள்ள Select Inverse  தேர்வுசெய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள்தேர்வு செய்த பாகத்தைமட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறுகட்டம் மினுமினுத்தவாறு ஓடும்.  இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பிசெய்து பைல்சென்று புதியதாக நீயுபைல் ஓப்பன் செய்யவும். அளவுகளை மாற்றாமல் ஓகேகொடுத்து எடிட்சென்றுபேஸ்ட் செய்யவும்உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.


Picture
பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்துப் பார்திருப்பீர்கள் . அதை இவ்வாறுதான் செய்வார்கள்.)  அடுத்து Feather பாடம். Feather  என்றால் இறகு என்று பொருள் ஆகும். இறகைபார்த்திருப்பீர்கள். அத நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்லசெல்ல நிறம்மங்கியது போல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்தமாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தைதேர்வு செய்யுங்கள்முன்பு கூறியபடிRectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட்கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather  கிளிக்செய்யவும்உங்களுக்கு Feather Selection உடன் ஒருசாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள்விரும்பும்  Redius Pixel  அளவை தேர்வு செய்யவும். இந்த அளவுஅதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather  அளவில் வித்தியசம் வருவதைகாண்பிர்கள். நான் இங்கு சூரியனின் படம் தேர்வுசெய்து


Picture
அதில் பிக்ஸல்ரேடியஸ் அளவு 80 வைத்துள்ளேன். படத்தை பாருங்கள்.


Picture
நாம் 80  பிக்ஸலில் தேர்வு செய்த படம் கீழே.


Picture
அது போல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ்


Picture
அளவு 20 வைத்து படம் தேர்வு செய்துள்ளேன்.



Picture
வித்தியாசத்தை பாருங்கள்

Picture
மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால் தான் அடுததுஇதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்குஉதவியாக இருக்கும். இதன் பயன்களையும் பின்னர் பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் பாடம் முடித்துக்கொள்கின்றேன். நன்றாக பயிற்சிஎடுங்கள்-மீண்டும் அடுத்தவாரம் பாடங்கள் படிக்கலாம்.

நன்றிவேலன்.


8/31/2010 11:22:29 am

I only recently started leaving comments! Makes me imagine a tiny additional about what I enjoyed and learned about the post! Fantastic ideas, thanks!

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    February 2010

    Categories

    All